முற்றுப்புள்ளிகள்

முற்றுப்புள்ளிகள்..!

இதோ இப்புள்ளியில் யாவற்றையும்
முடித்துக் கொள்ள விரும்புகிறேன்...!
இதனால்
வருத்தமோ இல்லை மகிழ்ச்சியோ
அடைந்து கொள்வது உங்களின் விருப்பம்...!

இனி நீங்கள்
எங்கு தேடியும் என்னை அடையாளம்
கண்டு கொள்ளக் கூடாதென்ற வேண்டுதலுடனேயே
இக்கணத்தை நழுவ விடுகின்றேன்..!

இனி நீங்களும் நானும்
எதிரெதிரேயோ அருகருகேயுமோ
சந்தித்தால் கூட
இவளை அடையாளம் காண்பது
சற்று கடினம் தான் உங்களுக்கு...!

இழப்பதற்க்கோ அடைவதற்க்கோ
ஏதுமில்லை எனும் வெறுமையான
இக்கணத்தில் கண்ணில் துளிர்க்கும்
நீரினை
என்ன செய்வதென்று தெரியவில்லை ....!

இப்படிக்கு,
கௌ.விஜயசாந்தி
DPI .

எழுதியவர் : கௌ.விஜயசாந்தி (7-Oct-16, 11:19 am)
சேர்த்தது : கௌ விஜயசாந்தி
Tanglish : mutruppullikal
பார்வை : 66

மேலே