மதுரை சாய்மான விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
சாய்மான நல்விநாய கன்தாளை நாம்வணங்க
ஓய்வாகத் திண்டிலே சாய்ந்தபடி - தாய்போல
வேண்டிய எல்லாம் அருள்வான் விநாயகன்
யாண்டும் அவன்தாள் வணங்கு! 1
ஓய்வாகத் திண்டிலே சாய்ந்தபடி காட்சிதரும்
சாய்மான நல்விநாய கன்தாளைப் - போய்வணங்க,
கேட்பதெல்லாம் நல்கும் விநாயகனை, நாம்மகிழ
வேட்புடன் அன்னவனை வாழ்த்து! 2