இவருக்கு என்ன அனுக்கம்
மெலிந்த இதழ்
மொழுகிய சிவப்பு..
விளைந்த செடியில்
விரிந்த ரோசாப்பூ!!
சிவந்த இதழ்
குவித்துக் கொண்டு - அவள்
செதுக்கிய முத்தம்
என் கன்னத்தில் கண்டு
சிவப்பு நிறம்
குழைத்த முகமாய்
சினத்துடனே அந்தி வானம்!!
ஏற்றத்தாழ்வை
ஏந்தி நிற்கும் மேனி - கையில்
ஏந்தி அணைக்கும்
நானோ சமதர்ம ஞானி!!- தாம்
நீந்திய மிசைகள்
தொலைந்ததை எண்ணி - மீண்டும்
ஏற்றத்தாழ்வுகள்
தீண்டிட வேண்டி
பொதிகைக்குப் பிறந்த
தென்றல் காற்று
கொதிக்கும் புயலுறு
கொண்டதின்று....
எங்கள் காதலின் இறுக்கம் – இதில்
இவருக்கு என்ன அனுக்கம்?