பாதையில் கண்ட பாவையொருத்தி
கம்பன் வடித்த கற்கிணறா...? இல்லை
கலைமகள் இசையில் விழுந்த மணற்சுழலா...?
கண்ணன் திருடிய வெண்ணைக் கிண்ணமா...? இல்லை
மன்னன் வெட்டிய தாமரைக்குளமா...?
கடையேழு வள்ளல்களில் ஒருவன் கண்டிருந்தால்கூட
கடனாளியாகியே கவலையில் விழுந்திருப்பானடி...
வால்மீகிமுனி இப்போது இருந்திருந்தால்கூட
வாள்முனையில் உனைக்கொண்டு துறவரம் துறந்திருப்பானடி...
பாட்டுடைத் தலைவனின் பார்வையில் சிக்கியிருந்தால்கூட
கண்ணம்மாவை மறந்து உனக்காய் பலகவிகளைத் தொடுத்திருப்பானடி...
ஆடவர் அனைவரையும் உன் கண்ணம் அழைக்குதடி
அத்துமீறி நெருங்கநினைத்தால் அவர்கண்ணங்கள் சிவக்குமடி...!
#இவளும்_என்_தமிழச்சிதான்