பூக்கள் ஏன் மலரவில்லை
தென்றலின் பாதையில்
தேன் மலர்த் தோட்டம்
வசந்தத்துடன் வண்டுகளும்
இசை பாட வந்தன
குயில்களும் கிளைகளில்
காத்திருந்தன
பூக்கள் மலரவில்லை !
ஏனென்று கேட்டன
அவள் வரவில்லை
அவளுடன் அவனும் வரவில்லை
என்றது தோட்டம்
அவள் யார் ? அவன் யார் ?
அவள் அழகிய தோழி
அவன் தோழியின் காதல் கவிஞன்
அவள் கைவிரல்களால் எங்களை பறிப்பாள் !
அவன் கவிதை வரிகளால் எங்கள் மனதை பறிப்பான் !
----கவின் சாரலன்