மரத்துப் போன மனிதம்

ஏழு மணிக்கு எழு !

எட்டு மணிக்கு உண் !

ஒன்பது மணிக்கு ஓடு !

பகல் முழுதும் பணம்  தேடு !

இரவில் திரும்பு !

தொடு திரைகளிலும்
தொலைக் காட்சிகளிலும் 
தொலைந்து போ ! 

உண்டு
உறங்கி
விழித்து
மீண்டும்
மீண்டும் ஓடு !

சுயநலத்தில் சுருங்கிப் போ !

சக  மனிதனை மற!

அவலங்களை கண்டு அன்னியமாகு!

இப்படியே இயந்திரமாய் இயங்குகிற வாழ்க்கையில்...

இடையிடையில்

குற்ற உணர்வுகளுடன் 

உறுத்தல்களாய்

அவ்வப்போது  விழித்து கொள்கிறது 

மனதுக்குள்

மரத்துப் போன "மனிதம்" !

எழுதியவர் : நிலாரவி (10-Oct-16, 3:21 pm)
பார்வை : 1107

மேலே