என் உயிரை தேடி

என்னை பெற்ற தாயின்
கண்ணீர் துடைக்க கூட வழியில்லாமல்
நாதியற்று கிடக்கிறேன்
உயிரோடு இறந்த பிணமாய்...!

தெருமுழுவதும் தோள் மீது
என்னை சுமந்த என் தந்தையின்
விழிகாணாமல் வலியோடு
வழியில்லாமல் தெய்வத்தின் மூச்சுக்காற்றை
தேடி தேடி அலைகிறேன்...!

நீங்கள் இல்லாமல் தோட்டத்தில்
நடுவில் கண்ணீர்துளி தெளிக்கிறேன்
என்னை சுற்றி ஆயிரம் பேர் இருந்தும்
தனிமையில் உங்கள் நினைப்பில் வாடுகிறேன்...!

உறவாடும் உறவும் இல்லை
உறவாடிய உயிரும் இல்லை
கரை ஓரம் கலை இழந்து
கரை தொடுகிறது என் கண்ணீர்

ஈரமான மணலில் உன் அன்பு இருந்திருந்தால்
கண்டவுடனே மண்ணோடு மண்ணாய் விழுந்துருப்பேன்
காற்றோடு கலந்திருப்பேன்
இங்குள்ள மண்ணிலும் ஈரமில்லை
மனதிலும் பாசமில்லை
என்னை செய்வது
என் முடிவான வாழ்க்கை இன்று தான் ஆரம்பிக்கிறது...!
=====================================
பிரியமுடன்,
J K பாலாஜி

எழுதியவர் : J K பாலாஜி (13-Oct-16, 10:59 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : en uyirai thedi
பார்வை : 117

மேலே