இதுதான் இன்றைய அரசியல்

ஈழப்போர் முடிவடைந்தாலும்
தமிழ் தமிழர்களின் நெஞ்சங்களில்
அணையாத விளக்காய் எரிந்து கொண்டு தான் இருக்கிறது அவர்களின் சோகங்கள்....
தமிழ் கட்சிகள் என்ற பேரில் தமிழ் மக்களை ஏமாற்றி அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழர்களின் உணர்வுகளை சிதைக்கின்றனர் தமிழ் அரசியல் தலைவர்கள்
குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு
என்பதைப் போல் தேர்தல் நேரத்தில்
தமிழர்களிடம் சென்று இல்லாத பொய்களை கூறி வாக்கு பெற்று வெற்றியடைந்து செல்கிறார்கள்
சுயநலத்தோடு....
பணமுள்ளவனோ அரசியலில் வந்து
தன்சார்பானவர்களுக்கும் பணம் கொடுப்பவர்களுக்கும் வேலை கொடுக்க ஏமாறுகின்றனர் கல்விமான்கள்
தப்பு செய்து சிறைச்சாலைக்கு செல்பவன் அடுத்தநாள் பிணையில் வருகிறான் அரசியல் செல்வாக்கால்
இப்படித்தான் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட குற்றவாளிகளோ மகிழ்வுடன் வாழ்கின்றனர்
இதுதானையா அரசியல்