அணையா விளக்கு

ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியற்ற வாழ்கையாய் தற்பொழுதும் வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறார்கள் துன்பங்களை சுமந்தவாறு......

அவர்கள் சுகங்கள் எல்லாம் சோகங்களாக மாறிவிட்டன!
அவர்கள் கனவுகள் எல்லாம்
காணாமல் போய் விட்டன!

முகமிழந்த மனிதர்களாக.....
முகவரியை தொலைத்தவர்களாக...
இருந்தும் வாழ வேண்டும் என்ற தலைவிதி

சாவுமின்றி வாழ்வுமின்றி சங்கடங்கள் நிறைந்து வாழ்கின்றனர் நரக வாழ்க்கையில்....

மாமரத்தில் படரும் குருவிச்சை போல் அவர்களின் வாழ்விலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது துன்பங்கள்....

அவர்களின் தேசத் தாகவேட்கையோ குறையவில்லை அவர்களின் நெஞ்சில் இப்பொழுதும் துன்பங்கள்
அணையாத விளக்காய் எரிந்து கொண்டு தான் இருக்கிறது.....

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (13-Oct-16, 2:11 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : anaiyaa vilakku
பார்வை : 76

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே