இதுதான் காதலா

உன் நினைவுகளில் உளறுகிறேன்
உன் கனவுகளால் பிதற்றுகிறேன்

உன் அருகில் உறைந்துபோகிறேன்
உன் சிரிப்பில் கொஞ்சம் கரைந்தும் போகிறேன்

உன் நெருக்கம் விரும்பி ஏற்கிறேன்
உன் இறுக்கம் திரும்ப கேட்கிறேன்

நிஜம் மறந்து நினைவிழந்து நானிருக்கையில்
உன் பெயர் ஒன்றே போதுமானதாயிருக்கிறது நான் உயிர்த்தெழ..

இதுதான் காதலா?

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (14-Oct-16, 5:27 pm)
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 167

மேலே