நான் எப்படி சொல்ல

என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் கேள் என்றேன்
நீ என்னைத்தான் வேண்டுமென்கிறாய்
என் உள்ளத்தை திருடி விட்டு,
என் எண்ணத்தையும் சொல்லி விட்டு,
ஏக்கப்பார்வை வீசும் உன் விழிகளுக்கு
நான் எப்படி சொல்வது..
உன் கன்னக்குழியை என் இதழ்களால் நிரப்பி
முத்த மொழியில் சொல்லட்டுமா?
என் காதலை!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (14-Oct-16, 5:25 pm)
Tanglish : naan yeppati solla
பார்வை : 99

மேலே