ஓடுகின்ற நீரோடை எல்லாம்

ஓடுகின்ற நீரோடை எல்லாம் காவிரி கங்கை இல்லை
உப்பு சப்பற்ற வார்த்தை கோர்வைகள் எல்லாம் கவிதை இல்லை
யாப்பானாலும் கற்பனை பூ காய் கனி இல்லையெனில் இலக்கியமில்லை
உதயத்தில் தோன்றி ஒரு பொழுது வாழ்வானாலும் மலர்கள் மலர்களே
இதயத்தை தொடாத கவிதைகள் ஒரு போதும் வாழ்வதில்லை
பாரதி போல் பாரதி தாசன் போல் ஒரு கவிஞனை
நான் இன்னும் காணவில்லை !
----கவின் சாரலன்