ஹைக்கூ தொகுப்பு 1

ஆலயத்தில் ஆண்டவன்
இல்லத்தில் அம்மா
ரெண்டும் ஒன்றுதான்...

குடும்பத்துக்காக
குடும்பத்தை விட்டே
ஓடுகிறான்...
அயல்நாட்டு வேலை...

எத்தனை முறை
கசக்கினாலும்
சாயம் போகாத ஆடை
வெள்ளையாடை...

உருவம் இல்லை
உருவம் இருந்தால்
பெரும் தொல்லை
காற்று...

குயிலுக்கு கூடில்லை
குயில் குஞ்சிடம்
வாடகை கேட்டது காகம்
ஏழையிடம் கல்விகடன் வசூல்...

மழையாலும்
காற்றாலும்
அழியாத கோடு
வறுமை கோடு...

குற்றம் செய்யாமலே
சிறை தண்டனை
தடுப்பணையில் நதி...

காதலர்கள் இல்லை
கம்பீரமாக நிற்கிறது
காதல் சின்னம்
தாஜ்மகால்...

உறகத்தில் ஒரு
இலவச
சினிமா காட்சி
வண்ணக்கனவுகள்...

தாயை தனியாக விட்டு
தாய் நாட்டை காக்க ஓடினான்
இராணுவ வீரன்...

தொடர்ந்து வானம் அழுகிறது
பூமியும் அழுகிறது
மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்...

வண்ணத்துபூச்சிகளிடம்
கற்றுக்கொண்டான்
புது புது சேலைகளை வடிவமைக்க
இயற்கையிடம் பாடம்...

குடிக்கார கணவனை
திட்டி தீர்த்து உதைத்தவள்
கடவுளிடம் கேட்டாள் தாலிபாக்யம்
எதார்த்தம்...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
சரியான ஆள்
தவறான இடத்தில்...

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
வானத்தில் மின்னல் தோன்றி மறைந்தது...

எழுதியவர் : செல்வமுத்து.M (18-Oct-16, 10:08 pm)
பார்வை : 1912

மேலே