மறைக்கப்பட்ட என் இதயம் 555

கண்ணே...
உன் காதலனின் பெயரை சொல்லி
சில நேரம் என்னை அழைக்கிறாய்...
உன் காதலன் கேட்க்கும் கேள்விகளுக்கு
என்னிடம் பதில் கேட்கிறாய்...
உன் காதலனுக்கு பிடித்ததும்
பிடிக்காததும் சொல்லி...
என்னிடம் வருத்தப்பட்டு
மௌனம் கொள்கிறாய்...
நான் மெளனமாக
இருக்கும் நேரங்களில்...
நீ யாரேனும்
விரும்புகிறாயா என்கிறாய்...
எப்படி சொல்வேன்
நீயே அவள் என்று...
எனக்கு பிடித்தது எல்லாம்
உனக்கும் பிடிக்கும்...
நானா வெறுப்பது எல்லாம்
நீயும் வெறுக்கிறாய்...
உனக்காக பறித்த ரோஜா உன்னை
கண்டதும் மறைத்துக்கொள்கிறேன்...
மலரை போலத்தான் என்
இதயமும் மறைந்துவிடுகிறது...
உன்னைக் காணும்போதெல்லாம்
என்னுள்ளே.....