அன்பே காதலி

அன்பே
என்னைக் காதலிக்கிறேன் என்று கூறு
காதலைச் சொல்லாமல் என்
நெஞ்சைப் போடாதே கூறு

உன்போல் அழகியை
கண்டதில்லை இந்தப் பாரு
உன் கருவிழியால்
ஒருமுறை என்னைப் பாரு

அன்பே
உன் அகத்தை
என் அகத்தோடு சேரு
சேராமல் பூசாதே
என் முகத்தில் சேறு

திருவிழா இல்லாத
நாட்களில் நீதானடி
உன் ஊருக்குத் தேரு
காதல் கலையை சீக்கிரம்
கற்றுத் தேரு

உனக்காக சிலப்பதிகாரம்
எழுத இல்லை இளங்கோ
நான் உன் பதிலுக்காக
காத்திருக்கும் இளம் கோ

எழுதியவர் : குமார் (19-Oct-16, 7:08 pm)
பார்வை : 385

மேலே