அக்கறை

வீராசாமி வாத்தியாருக்கு
எப்பவுமே வீராப்பு அதிகம்!
இப்படிதான் ஒரு நா..(ள்)
மாராப்பு போடாம வந்த மாணவியப் புடிச்சி
பேயாட்டம் ஆடுனாரு..! அவரு ஆடுன ஆட்டத்துல
மத்த மாணவிங்களெல்லாம் பயந்துபோய்
தங்களோட மாராப்புகள கொஞ்சம் கிழிச்சி முடிச்சி
மாராப்பு போடாம வந்த மாணவிமேல போத்துனப் பிறவுதான்…
தன்னோட பேயாட்டத்தை நிறுத்துனாரு –
வீராப்பு வீராசாமி வாத்தியாரு…!


இப்படி கலாச்சாராம் காக்குற கர்த்தாக்கள் மத்தியிலதான்
விலகுற மாராப்ப வெறியோட பாக்குற கழிசாடைகளும் உண்டு...!

எழுதியவர் : சாய்மாறன் (20-Oct-16, 3:09 pm)
பார்வை : 65

மேலே