வேர்களை பிரிகின்ற கிளைகள்
கருணை கருவறை விட்டு கரும்பினிப்பாய்
தந்தை வம்சம் தழைக்க அம்சமாய் பிறக்கின்றனர்
ஒரு தாய் வயிற்றில் பூத்த பல பூக்களாய்...!
இல்லமெனும் கூட்டில் இன்பமிறைக்கும் இனிய வானம்பாடிகளாய் வாழ்கின்றனர் பிள்ளைகள்...!
குடும்ப வானத்தின் குளிரூட்டும் நட்சத்திரங்களாய் காதலெனும் மாயவலையில் வீழ்ந்து
திசை மாறும் பறவைகளாய் பிரிகின்றனர் சுயலநலத்தோடு....!
உடைந்த அலைகள் உயிர் பெற்று மீண்டும் கடலை சேர்வது போல் வேர்களைப் பிரிந்த கிளைகள் மீண்டும் தேடிச்செல்கின்றனர் சொத்தைப் பெறுவதற்காய்.....!
தம் பிள்ளைகளை மனதார வாழ்த்திய பெற்றோர்களோ அனைத்தையும் கொடுத்து வெறும் இதயத்தோடு நடக்கின்றனர் முதியோர் இல்லத்தை நோக்கி....!
வலி கொடுத்து பிறந்த பிள்ளைகள் வஞ்சகமின்றி அன்பை சமமாக கொடுத்த தாயின் பாசத்தை மறந்தவர்களாய் செல்கின்றனர் கைநிறைய சொத்துடன்....!
சி.பிருந்தா
மட்டக்களப்பு