மீனவர் நிலைமை
அதிகாலை பொழுதில்
இருட்டு வெளுக்கும் முன்
கடலுக்கு சென்றான் தொழிலாளி..!
கஷ்டப்பட்டு பிடித்து வந்த மீன்களை கரையில் நிற்கும் முதலாளியிடம் கொடுத்து வெறும் கையோடும் வெறும் இதயத்தோடும் செல்கின்றான் வீட்டை நோக்கி..!
கையிலும் பையிலும் மனதிலும் நிறைவோடு செல்கிறான்முதலாளி..!
இது தான் இன்றைய மீனவர் நிலமை.
உழைப்பவன் ஒருவன்
பிழைப்பவன் வேறொருவனா?
சி.பிருந்தா
மட்டக்களப்பு