என்னில் வந்து வந்து சென்ற அந்த வார்த்தை 555
அமுதே...
அந்த அரசு பேருந்தில் உன்னிடம்
நோட்டு புத்தகம் வைக்கும்படி...
உதவிகேட்டு முதன்முதலில்
அறிமுகமானேன் நான்...
நான் அவசரமாக சாலையை
கடக்கும்போது...
என் எதிரே நின்று
ஹலோ என்றாய்...
மீண்டும் ஒருநாள் பேருந்து
நிலையத்தில் காத்திருந்தாய்...
அப்போது உன் தோழியிடம்
பேசி என்னிடம் சிரித்தாய்...
பக்கத்தில் வந்தேன் என்னை
பற்றி விசாரித்தாய்...
அப்போது ஒருவார்த்தை
என்னில் மட்டும்...
உதடுவரை வந்து வந்து
மறைந்துகொண்டு இருந்தது...
அது இனி எங்கே எப்போது
சிந்திப்போம் என்று...
என்னுள் வந்த வார்த்தை
உனக்குள்ளும் வந்ததா கண்ணே.....