மழை

மழை

உன்னால் நனைந்தும்
தலை துவட்டாத மரங்கள்

மூழ்கும் என உணர்ந்தும்
சிறுவர்கள் விடும் காகித கப்பல்கள்

நனைந்தும் நனையாத
குடையின் சாரல் சுகம்

உன்னால் முத்துக்கள் பூக்கும் பூக்கள்

இறைவன் வரைந்த வட்ட வட்ட ஓவியம்
குளத்தில் பெய்த உன் ஒரு துளி

கடலில் ஆவியாகி வானம் சென்றாலும்
பூமிக்கு மறவாமல் வந்து செல்லும் விருந்தாளி

கொடுப்பது நீ கொள்வது நாங்கள்
இடைத்தரகர் இல்லாத இலவசம் நீ

நீ பொழிந்தால் இந்த பூமி பூக்காடு
நீ மறுத்தால் இந்த பூமி இடுகாடு

எழுதியவர் : பூ.முல்லை ராஜன் (23-Oct-16, 6:22 pm)
Tanglish : mazhai
பார்வை : 186

மேலே