பூவுதிர் நடனம்

நீ விட்டுச்சென்ற நினைவு
ஒரு பெருங்காட்டை விரித்தது..

அதன் ரோகைகளில்
அறுந்துருண்டோடும்
வாசனைகள்
உன்னால் நிரப்பட்டது..

கொட்டிக்கிடக்கும்
கனிகளும் இலைகளும்
நீ எனக்காக
பதுக்கி வைத்த முத்தங்கள்..

உறைந்த மௌனத்தை
உடைக்கும் முயற்சி
காற்றின் உரையாடலில்
உன் சாயல் வார்த்தைகள்..

வானத்தை
பூக்க வைத்துவிட்டாய்
இப்போது மரங்களிலும்
பூவுதிர் நடனம்..

ராகம் தளும்பும் புல்லாங்குழல்
நறுமணமாய்
கசிந்துகொண்டிருக்கிறது
இளையராஜாவை..

நிதியினை எழுப்பி
நீந்தும் மீன்கள் போல்
என் நெஞ்ச நதியெங்கும்
உன் நினைவு மீன்களே..

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (24-Oct-16, 7:17 pm)
பார்வை : 96

மேலே