தீபாவளி பட்டாசு குறித்து அப்பா-பிள்ளை உரையாடல்

பட்டாசு பட்டாசு னு பட்டாசு வாங்க பணம் கேட்டு நிற்கும்
பயனுக்கும் அப்பாக்கும் ஒரு சின்ன உரையாடல்

பாலு (பையன்) : அப்பா இந்த தீபாவளிக்கு எனக்கு அஞ்சாயிரம் ரூபா
பட்டாசு வாங்க வேண்டும் எப்போ தறீங்க

அப்பா : டேய் பாலு, இந்த பட்டாசு வெடிச்சு பணம் காரியாவது
எனக்கு பிடிக்காது அதனால ஒனக்கு பட்ஜெட் ல
பட்டாசுக்கு இடம் இல்ல; இன்னும் ஒன்னு முக்கியமா
நீ படிச்சவன் தானடா, தீபாவளி நரகாசுரன் வதை முன்னிட்டு
அவன் வேண்டியபடி இருளை போக்க ஒளி கொண்டு
நாம் குதுகூலம் அடையனும், மத்தபடி இந்த வேண்டாத
பட்டாசு லாம் தேவ இல்லை; டேய், ஒன்னு சொல்லு கேக்கறேன்
சரியான பதில் சொன்னா நீ கேட்ட காசு தாரேன் பட்டாசு வாங்க

பாலு : ஹையா அப்படிவாங்க வழிக்கு; அப்பான்னா அப்பதான்
கேளுங்கப்பா

அப்பா ; டேய் பாலு நரகாசுரன் காலத்துல வெடி மருந்து இருந்ததா

பாலு : அப்பா அது அது த்ரேதா யுகம் ; வெடி மருந்து வந்தே முன்னூறு-நானுறு
ஆண்டுதான் ப ஆறது

அப்பா : அப்படி ஆழ விடு; நரகாசுரன் பட்டாசு வெடிக்க சொல்லல ! ஹீ....ஹீ ....ஹீ

பாலு : அப்பா.....................

அப்பா ; போ போ அம்மா இனிப்பு தருவாங்க சாப்பிடு
புது டிரஸ் போட்டுக்கோ
ராத்திரி வீடு முழுக்க தீபம் ஏத்தி இருளை போக்குவோம்
மனா இருளை ; வேண்டாம் இந்த காது துளைக்கும் பட்டாசு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Oct-16, 11:05 am)
பார்வை : 215

சிறந்த நகைச்சுவைகள்

மேலே