குழந்தை

குழந்தை
அதிகாலை 5மணி இருக்கும் யாரோ விசும்பி அழும் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் கார்த்திக், அருகில் தன் மனைவி பிரியா காலில் முகம் புதைத்து தேம்பி , தேம்பி அலுது கொண்டிருந்தாள்
“என்ன பிரியா என்ன ஆச்சு?? ஏன் அலுகற என்ன ஆச்சுனு சொல்லு ???
பிரியா முகத்தை நிமிர்ந்து பார்த்த பொழுது தான் தெரிந்தது, நீண்ட நேரமாய் அழுது கொண்டிருப்பது, இல்லங்க இந்த மாசமும் வீட்டுக்கு தூரம் ஆகிட்டேன், நம்ம கனவு ஏக்கம் எதுவுமே நிறைவேறாதா?? நம்ம வீட்டுலையும் குழந்தை சத்தம் கேட்காதா?? ஆதங்கத்துடன் அழுத மனைவியை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமலே அவன் எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் உடைதெரிந்தவைகளை தாண்டி ஆண் என்றும் பாராமல் அழுகை வந்தது....
கார்த்திக்-பிரியா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி எட்டு வருஷம் இருக்கும் , ரெண்டு பேருமே சாப்ட்வேர் இன்சினியர்ஸ் அதே போல ரெண்டு பேருக்கும் கிராமத்து பின்னணி, குழந்தைக்காக போகாத கோயில் இல்ல, பார்க்காத டாக்டர் இல்ல , பிரியா வேலையை ரிசைன் பண்ணி ரெண்டு வருஷம் ஆச்சு, எங்காவது இந்த டாக்டர் குழந்தையின்மைக்கு நல்லா பார்ப்பவர், கைராசி மருத்துவர்னு கேள்வி பட்டாள் போதும் அடுத்த நாளே பிரியாவும், கார்த்திக்கும் அங்க போய் பார்த்திடுவாங்க, அப்படி ஒருத்தர் சொல்லி கேள்வி பட்ட ஒரு மருத்துவமனையில தான் இப்போ ரெண்டு பேரும் அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....
டோக்கன் நம்பர் எட்டு பிரியாகார்த்திக், வரவேற்பறையில் அழைத்ததும் இரண்டு பேரும் எழுந்து உள்ளே சென்றனர்.
வாங்க ப்ரியா, வாங்க கார்த்திக் சொல்லுங்க என்ன ப்ராபளம்???
பேபிக்காக தான் டாக்டர் பார்க்க வந்திருக்கோம் ...
அப்படியா கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு???
எட்டு வருஷம் ஆச்சு டாக்டர்......
சரி ஒரு சின்ன ஸ்கேன் எடுக்கணும் பிரியா உங்களுக்கு, கார்த்திக் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பன்னுங்க, சிஸ்டர் ஸ்கேனுக்கு ரெடி பண்ணுங்க,
கார்த்திக் வெளியே வந்து அங்கே இருந்த குழந்தை புகைபடங்களை எல்லாம் ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான், கார்த்திக்கிற்கு குழந்தை என்றால் அவ்வளவு ஆசை, அவன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் குழந்தை அவனை பார்த்து சிரித்தது, கார்த்திக்கும் அந்த குழந்தை செய்யும் சேட்டைகளை எல்லாம் ரசித்தபடி அமர்ந்திருந்தான்....
மிஸ்டர் கார்த்திக் உங்கள டாக்டர் வரசொல்றாங்க, ஸ்கேன் முடிந்திருக்கும் போல என்ற சிந்தனையுடனே உள்ளே சென்றான்,
வாங்க கார்த்திக் ஸ்கேன் எல்லாம் எடுத்தாச்சு, ரொம்ப வீக்கா இருக்காங்களே பிரியா, என்ற வார்த்தையுடன் பிரியாவை பார்த்தார் டாக்டர் , சரியாவே சாப்ட மாட்ட இவ அதான் டாக்டர் இனி நான் பாத்துக்கறேன்....
அதுமட்டுமில்லாம நீங்க இதுக்கு முன்னாடி அபாசன் பன்னிருகீங்களா??? குழந்தை வேண்டாம்னு தள்ளி போட்டிருக்கீங்களா?? நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட உண்மைய மறைக்காம சொல்லணும் , அப்போ தான் என்னால மேற்கொண்டு ட்ரீட்மென்ட் ஸ்டார் பண்ண முடியும்
சற்று நேரம் அமைதியாக இருந்தனர், அவர் பெண் மருத்துவர் என்பதால் பிரியா தான் தங்கள் பக்கம் உள்ள தவறை சொல்ல முன்வந்தாள் ..... நானும் கார்த்திக்கும் லவ் மேரேஜ் ரெண்டு பெரும் படிச்சு முடிச்சதும் வேலை தேடினோம், கிடைச்ச சந்தோசத்துல உடனே கல்யாணம் பண்ணிகிட்டோம், ஆனா எங்க பேரன்ஸ் எங்கள ஏத்துக்கல கல்யாணம் பண்ணினதும் குழந்தை பெத்துகிட்டா நாங்க முன்னேற முடியாதுன்னு முடிவு பண்ணோம் சாப்ட்வேர்பீல்டுல இருக்கறதால மூனு வருசத்துக்கு குழந்தை வேணாம் முடிவு பண்ணோம், ஆனா ......... அதுக்கு இடையில ரெண்டு முறை அபாசன் பண்ணிடோம் டாக்டர் என்று கலங்கிய வார்த்தைகளுடன் பேசினாள் பிரியா .....
அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் “இந்த காலத்து ஜெனரேசனுக்கு குழந்தை பிறக்கறது வளக்கறது எல்லாம் சாதாரணமா போச்சு, குழந்தை பெத்துகிட்டா முன்னேற முடியாதுன்னு தெரியுற உங்களுக்கு முன்னேறிட்டு கல்யாணம் பண்ணிருக்கணும்?? குழந்தை பிறப்பை தள்ளிபோட்டோலா, அல்ல அடிக்கடி அபாசன் செஞ்சாலோ தாயாகற வாய்ப்பே உங்களுக்கு இல்லைன்னு உங்கள்ள எத்தனை பேருக்கு தெரியும்?? உங்க ஆசைக்கு,, வாழ்க்கை முறைக்கும் தகுந்த மாதிரி குழந்தைய பெத்துக்கலாம்னு நினைக்க இது என்ன கடைல வாங்குற பொம்மையாம்மா?? அடிக்கடி அபாசன் பண்ணினாதால உங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு பிரியா, குழந்தைய தாங்குற அளவுக்கு சக்தி உங்க கிட்ட இல்ல முதல்ல உங்கள ஹெல்தியா ஆக்கிடு வாங்க, இப்போதைக்கு ரெண்டு டானிக் மட்டும் கொடுக்கறேன், சாபிட்டு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வாங்க.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது தான் தெரிந்தது, தாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு என்று, காரில் ஏறி இருவரும் அமர்ந்ததும் கார்த்திக் பிரியாவின் கையை அழுத்தமாக பிடித்தான், பிரியா கார்த்திக்கின் தோளில் சாய்ந்தால், இருவருக்கும் அது ஆறுதலாக இருந்தது, இருவரின் சிந்தனைகளை கலைக்கும் விதமாக பிரியாவின் செல்போன் அடித்தது....
ஹெலோ, சொல்லு சத்யா....
ம்ம் நல்லா இருக்கேன் ........... நீ ??
அப்படியா ரொம்ப சந்தோசம் எப்போ வரிங்க குடும்பத்தோட வர்றீங்களா நாளைக்கா, சந்தோசம் வாங்க வாங்க அழைப்பு துண்டிக்கப்பட்டதும் பிரியா கார்த்திக்கை பார்த்து, நாளைக்கு சத்யா வர்றாங்க, அவ கன்சீவா இருக்காளாம் நாளைக்கு குடும்பத்தோட வர்றாங்கலாம், நம்ம வீட்டுக்கு ..... அப்படியா சரி சரி என்றான் கார்த்திக் ...
சத்யா பிரியாவின் தங்கை பிரியா காதல் திருமணம் செய்ததால், சத்யாவின் படிப்பை பாதியிலே நிறுத்தி வீட்டோடு வைத்திருந்தனர் அப்புறம் ஓரிரு ஆண்டிலே சத்யாவிற்கும் திருமணம் முடிந்தது இப்பொழுது அவள் தாயாக போகிறாள் தன்னால் தான் தன் தங்கச்சியின் படிப்பு பாதியிலே நின்றது என்ற குற்ற உணர்ச்சி தனக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது
சத்யாவிற்கு பிடித்த அணைத்து உணவுகளையும் தேடி தேடி சமைத்து வைத்திருந்தாள் பிரியா, எப்போ வருவாங்கன்னு ரெண்டு பேருமே எதிர்பார்த்துட்டு இருந்தாங்க ,
வந்ததும் சத்யா பிரியாவை கட்டியணைத்து அக்கா நல்லா இருக்கியா பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு என்று குழந்தை போல் இருவரும் பேசினார் .....
பிரியா சத்யாவிற்கு பிடித்த உணவுகள் அனைத்தையும் செய்து கொடுத்தாள், சாப்பாடு சாப்பிடு விட்டு பிரியா பாத்திரம் அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் ....
பிரியா கண்ணு !! சட்டென திரும்பினாள் சத்யாவின் மாமியார், வாங்க அத்தை சாப்பிட ஏதும் வேணுமா, சொல்லியிருந்தா நானே கொண்டு வந்திருப்பேன்ல, நீங்க ஹால்ல வெயிட் பண்ணுங்க நான் கொண்டு வர்றேன்..
இல்லம்மா நான் உன்கிட்ட பேச தான் வந்தேன், சொல்லுங்கத்தை
ஏதும் விசேசம் உண்டாம்மா , டாக்டர் ஏதும் பார்த்தீங்களா ???
சட்டென முகம் மாறியது பிரியாவிற்க்கு, இந்த கெல்வின் தான் அவளை கச்டபடுதும் வார்த்தைகள் .....
ம்ம் பார்த்துட்டு தான் இருக்கோம் ......
ஏம்மா கேக்குறேன்னு தப்பா , நெனசுக்காதா உம் புருசனுக்கு ஏதும் குறையாம்மா????
அத்தை அப்படியெல்லாம் இல்லை , அவர் என்ன காதலிச்சு கல்யாணம் பண்ணீருந்தாலும் இப்ப வரை என்ன ராணி மாதிரி தான் பாத்துக்கிறார், என் மனசு கஷ்டபடுற மாதிரி ஒரு நாள் கூட நடந்துகிட்டது இல்லை,அப்படியே அவருக்கோ, இல்லை எனக்கோ குறை இருந்தா கண்டியா நாங்க ரெண்டு பேரும் பிரிய மாட்டோம், முகத்தில் அறைந்தது போல் பேசி விட்டாள் பிரியா, வெளியே எங்கோ போக கிளம்பி கொண்டிருந்த கார்த்திக் பிரியா இப்படி பேசுவதை கேட்டு ஆறுதலாக இருந்தது.
வெள்ளிகிழமை பிரியாவும், கார்த்திக்கும் கோயிலுக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தாள், பிரியா சீக்கிரம் வா, கிளம்பியாச்சு வாங்க போலாம் ....
சிறப்பு பூஜைகள் எல்லாம் முடிந்தது மன அமைதி தரும் இடம் கோயில் தானே இருவரும் அமைதியான இடத்தில உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் எங்கோ சத்தமாக குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது
எத்தனையோ முறை, குழந்தை அழும் சத்தத்தை கேட்டு ஓடி சென்று பார்ப்பார்கள் குழந்தை அவர் குழந்தை அவர் தாயுடன் அலுது விளையாடி கொண்டிருக்கும் அதுபோல இதுவும் என்று நினைத்து தங்கள் பேச்சை வேறு பக்கமாக திருப்பினர்,, ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை அழுது கொண்டே இருந்தது
பிரியாவும் கார்த்திக்கும் குழந்தை அழும் சத்தத்தை நோக்கி சென்றனர், அங்கு தரையில் பச்சிளம் குழந்தை ஒன்று யாரும் இல்லாமல் அலுது கொண்டிருந்தது, பிரியாவும் கார்த்திக்கும் பதற்றத்துடன் ஓடிச்சென்று அந்தக் குழந்தையை எடுத்தனர், அநேகமாக குழந்தை பிறந்து ஒரு பத்து நாள் தான் இருக்கும்
கோவிலில் இருந்தவர்களிடம், கோயில் நிர்வாகிகளிடமும் விசாரித்தனர், அது யார் குழந்தையும் இல்லை என்று சொல்லி விட்டனர் கோயில் நிர்வாகம் கடைசியாக அந்தக்குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க முன் வந்தது
சார் எங்க கிட்ட அந்தக் குழந்தைய கொடுத்திருங்க சார் நாக நல்லா பார்த்துக்கிறோம் ரொம்ப நாளா குழந்தை இல்லாம தவிக்கிறோம்,இரு கரம் கூப்பி வேண்டி கேட்டான் கார்த்திக்
கோயில் நிர்வாகம் சற்று யோசித்து சரிங்க சார் இந்தப் பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போட்டுடு குழந்தைய எடுத்துட்டு போங்க ....
வீடெங்கும் விளையாட்டு சாமான்கள் பெண் பிள்ளை என்பதால் குட்டி குட்டி ஆடைகளை நிரப்பி வைத்திருந்தனர்
தேங்க்ஸ் கார்த்திக் நமக்கு குழந்தை இல்லைன்னு கவலை பட்டு அழுறத விட ஒரு குழந்தைய தத்தெடுத்து வளர்திடறது எவ்ளோ மேல், இந்த உலகத்துல எந்த குழந்தைகளுமே ஆனதை இல்லை , குழந்தை இல்லாம தவிக்கிற ஒவ்வொரு தம்பதியினருக்கும் காப்பகத்துல எத்தனையோ குழந்தைகள் காத்துட்டு இருக்கு, வீடு முழுக்க சந்தோசத்தை நிரப்பி வைக்க குழந்தையால மட்டுமே முடியும் ........

எழுதியவர் : க.நாகராணி (29-Oct-16, 1:16 pm)
சேர்த்தது : நாகராணி
Tanglish : kuzhanthai
பார்வை : 825

மேலே