காதல்
பெண்மையின் இலக்கணம் நீ
அதில் நீந்தி விளையாடும்
கவிஞன் நான்
நான் புனையும்
காவியத் தலைவி நீயே
எந்தன் கவிதைகளால்
உனக்கு மாலையிடுவேன்
உனக்கு வாழ்வளிக்கும்
மன்மதனாய், மணாளனாய்!
இனி ஏன் தயக்கம்
விரைந்து வந்திடுவாய்
என் காதலை ஏற்றிடுவாய்
இனிதாய் நாம் வாழ்ந்திடலாம்
என் கவிதா மணியே
என் காதல் காவியமே !
.