என் காதலிக்கு கல்யாணம்

உசுராய் காதலித்தேன்
உண்மையாய் காதலித்தேன்
உன்னையயே காதலித்தேன்
உறுதியாய் காதலித்தேன்.

என்னையே ஏமாற்றி
எப்படி நீ வாழ்ந்திடுவாய்
ஏமனாய் நீ வந்து
என்னையே கெடுத்து விட்டாய்.

உதறியே தள்ளி விட்டு
ஊர் அறிய கல்யாணம்
உன் இதயத்தை இரும்பாக்கி
என்னை கோழையாக்கி...

காதலின் தோல்வியால்
கதறுகிறேன் நான் இன்று
கல்யாண கோலத்தில்
புத்துணர்வில் நீ இன்று...

புதுமையாய் வாழ்ந்து விடு
நீ பல்லாண்டு காலம்
மனதார வாழ்த்துகிறேன்
மாஜி காதலனாய் நான் நின்று....

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (31-Oct-16, 3:27 pm)
பார்வை : 446

மேலே