காதல் தேவதை

தேவை தீர்க்கும் தேவதை
சேலை கட்டி வந்ததென்ன
பட்டு சேலை கட்டி வந்ததென்ன

பட்டழகா இவள் கட்டழகா?
சூரியனையும் சுடும் கண்ணழகா?
சூரனையும் வதைக்கும்கூர் மூக்கழகா?
முல்லை மயங்குமவள் பல்லழகா?
முத்தமிழ் பொங்கும் பேச்சழகா?
என்னிதழ் தேடும்
உன்னிதழ் அழகா?
தோடு கொஞ்சும் உன் காதழகா?
ஆரக் கழுத்தழகா?
மதி மயக்கும் மார்பழகா?
மனம் மயக்கும் உன் மனமழகா?
இல்லாமல் இருக்கும் இடையழகா?
இடை நெளியும் நடையழகா?

என்னை கொல்லுவதென்ன?
என்னை கொல்வது என்ன?

தேவை தீர்க்கும் தேவதை
சேலை கட்டி வந்ததென்ன
பட்டு சேலை கட்டி வந்ததென்ன
கொல்லாமல் கொல்வதென்ன


ரா தி ஜெகன்

எழுதியவர் : (31-Oct-16, 4:31 pm)
Tanglish : kaadhal thevathai
பார்வை : 322

மேலே