கற்பனை குடி

என்னைகாவது காத்திருந்து பாா்...
வருவாளோ வரமாட்டாளோ என்று

பாித்தவித்து பாா்
பயம் கலந்த பாசத்துடன்...

வாயிற் கதவை வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு
எப்ப வருவாளோ எப்படி வருவாளோ
என எட்டி எட்டி பாா்....

காத்துகொண்டு எதிர்பாா்கொண்டு இருக்கையில் தள்ளாடி கொண்டு வரும் அவளை...
தாங்கிபிடித்து தாமதிக்காமல் சாப்பிட செய்து உறங்க வைத்து
ஒன்றும் புரியாமல் பயந்த குழந்தையிடம் சமாளித்து

காலையில் இருந்து சக்கரமாய் ஓடி வேலை பாா்த்த கால்கள் ஓய்வாக சாயும் நேரம்...

ஓவென்று வாந்தி எடுப்பாள்
வாதிடாமல் கழவி சுத்தம் செய்து
கண் அசர் தூக்கம் வருமா?

துக்கம் தொண்டையை அடைக்கும்
கண்ணீரை குழந்தைகள் அறியாமல் அடக்கி அழுது முடித்து தூங்க செல்
எப்போ தூங்கினாயோ தெரியாது
ஆனால் எந்திரிக்கும் நேரம் மட்டும்
அதிகாலை ஐந்து மணியாய் இருக்கும்

சந்தோம் சந்தேகமாய் இருக்கும் சாகும் வரை...குடிக்கும் சாகோதரனே
கற்பனை செய்யமுடியுமா இப்படி ஒரு
வாழ்வை?

வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்
இப்படித்தான்
உன்னவள்

கட்டியவள் காத்திருக்க
அவள் கண்ணீரை குடிக்கின்றாய்..
நீ குடித்து கூத்தடிக்க...
குடும்பத்தை ஏனடா கூச வைக்கின்றாய்?

விஷம் குடிப்பது நீ,
சாவது உன் மனைவி மக்கள்...

எழுதியவர் : சுஜித்ரா பிரகாஷ் (5-Nov-16, 10:13 pm)
Tanglish : karpanai kuti
பார்வை : 75

மேலே