நெல்லு வேலையுற பூமியெல்லாம்
நெல்லு வேலையுற .பூமியெல்லாம்
மண்ணு மனையின்னு மாத்திபுட்டா
நாளைவரும் சந்ததிக்கு
விவசாயமே வேடிக்கையா போகும்டா .....
மணப்பாறை மாடுகட்டி
மாயவரம் ஏறுப்பூட்டி
உழுதுநட்ட வயலெல்லாம்
செல்லக்கண்ணு
இன்னைக்கு வீட்டுமனையாகிப்போச்சு
செல்லக்கண்ணு
விவசாய நெலெங்களல்லாம்
வீதிப்போட்டு மனைகளாக
அதிக வெலைக்கு விக்குறாண்டி
செல்லக்கண்ணு ...நீயும்
ஆசைப்பட்டு வாங்கலாமா
செல்லக்கண்ணு ( மனப் )
தாத்தன் பாட்டி வேலைசெஞ்சி
களைச்சிபோயி படுத்திருந்த
களத்து மேடு கழனியாட்சி
செல்லக்கண்ணு ......அந்த
கழனியிங்கு காணப்போச்சு
செல்லக்கண்ணு ......
நஞ்ச பூஞ்ச நெல்லங்கள்லலாம்
கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சி
விவசாயமே மறஞ்சிப்போகுது
செல்லக்கண்ணு ...நாளைக்கு
உணவு பஞ்சம் வந்திடும்ண்டா
செல்லக்கண்ணு (மனப்)
சம்பா குருவை தாளடியின்னு
மூன்று போகம் வெளைஞ்சிருந்த
வயல்வெளிகள் வறண்டு போச்சு
செல்லக்கண்ணு .......அது
ஒருபோகமா கொறஞ்சிபோச்சு
செல்லக்கண்ணு .......அந்த
ஒருபோக விளைச்சலுக்கு
மழைகூட பொழிவதில்லை
நட்ட பயிர் கருக்குதடா
செல்லக்கண்ணு .........நாங்க
பட்ட துயர் மாறுமடா செல்லக்கண்ணு ( மனா )