விழியோரம் வலிகள்

விழியோரம் வலிகள்
சுமந்து
என் கவிகள் மூலம்
கொஞ்சம் இறக்க
வந்தோன்
என் மீது விழுந்த வலிகளை.!


என்னை தீண்டாத
வலிகளுமில்லை
மண்ணைத் தொடாத
உடலுமில்லை இந்த
உலகத்தில்.
மிச்சமில்லாத என்
நினைவுகளை
களவுகள் செய்து
கல்லறையில் முடக்கி
வைப்பது என்ன
நியாயம் கூறிவிடு
அன்பே...?


வானில் மிதக்கும்
நட்சத்திரங்கள்
கூட என்
ஞாபகங்களை பார்த்தால்,
ஊமைக் கண்ணீர்
வடிக்கும்
இந்த உலகம்
அழியும்வரை.


பேசமுடியாத நினைவுகள்
வேசம் போட்டு
ஆடுகின்றது தனிமையில்
வாடுகின்ற என்னை பார்த்து.


பாசம் நிறைந்த இந்த உலகை உனக்காய்
வெறுத்து,
என் நாடிகை அறுத்து
மரணிக்கின்றோன்
விழியோரம் வீசிய வலிகளை
சுமந்தபடி உயிரே....!!



பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (9-Nov-16, 8:12 pm)
Tanglish : vizhiyoram valikal
பார்வை : 126

மேலே