தனலட்சுமி

கவிதை என்ற சொல்லுக்கு
அர்த்தம் அறியாமல் இருந்தேன்
தனலட்சுமி
அறிந்தேன் இப்போது
எப்போதும் நீ தான்
எனது கவிதை என்று
பறந்தேன் பட்டாம்பூசியாக
உன் கூந்தலில் அமர்ந்திட
சிறகடித்தேன் சிட்டு குருவியாக
உன் கன்னத்தில் முத்தமிட்டு சென்றிட
வரைந்தேன் வரைபடமாக
உன் கண்ணில்
உள்ள கருவிழியினை
என் மூச்சை சுவாசிக்க
சித்தமாகும் உன் மூக்கினை
பள்ளமாக
விழும் சிரிப்பின் குழியினை
செவ்வானமாக
சிவந்திருக்கும் உன் உதட்டினை
கரும்புள்ளியாக
காட்சி தரும் மச்சத்தினை
மூக்கின் கீழே
உதட்டின் மேலே
இடமளிப்பாயா உன் இதயத்திலே??
தனலட்சுமி
எனக்காக
உன்னை மகிழ்வித்து
என்றும் அதில்
நான் மகிழ்ந்திடவே.........

எழுதியவர் : சரத் குமார் (10-Nov-16, 10:30 pm)
பார்வை : 329

மேலே