உன்னால் நான்

காலை பனியாய்
உருகுகிறது
உன் நினைவுகள்
தேனாய்
இனிக்கிறது
உன் சொற்கள்
மாலை தென்றலாய்
இதமாய் வீசுகிறது
உன் பார்வை
கடலாய் மாறி
என்னை உன்னுள்
மூழ்க செய்கிறாய்
வானவில்லின்
வண்ணங்கள் உன்னுள்
பிரதிபலிக்கின்றன
உன் ஒற்றை
பார்வையால் என்னை
கொலை செய்கிறாய்
உன் கொலுசின்
சத்தம் எனக்கு
தேசிய கீதம்
உன்னை நினைக்கும்
நொடியில் மரணத்தை
வெல்கிறேன்
உன் கார்குழலில்
என்னை
கட்டி போடுகிறாய்
உன் தீண்டலால்
நானும் சாபவிமோசனம்
பெற்றேன்
பறவையாய்
பறக்கிறாய்
என் மனதுக்குள்
காற்றாய் மாறி
உன் மூச்சுக்குள்
நுழைகிறேன்
என் இதய
துடிப்பிலும்
நீயே துடிக்கிறாய்..