காதல்
உன் கண்ணீர் துளிகள்
கன்னம் நினைத்ததை விட
என் மனதை நனைத்தது
அதிகமடி ...
உன் தலைவலி தைலம்
அது காற்றில் பரவி
காற்று தூய்மை
அடைந்ததடி ...
உன் பார்வை என்
மேல் விழுந்து
என்னை மாயம்
செய்ததடி ...
உன் கண்ணசைவு
என்னை உன்னிடம்
இழுத்து
வந்ததடி ...
உன் நெற்றி திலகம்
என் வாழ்வை
ஒளிமயமாக்கியதடி ...
உன் சேலையின்
மடிப்பு
என் இதயத்தை
மடித்து போட்டதடி...
உன் காதல்
நிறைந்த மனசு
என் பிறவியை
இன்னும் கூட்டுதடி ...