"சொல்லி அனுப்புகிறோம் "
பெண் பார்க்கும் படலம் ...
முகத்தில் வெட்கம் ,
தேகத்தில் சிறு நடுக்கம் ,
இரவெல்லாம் ஒத்திகை ,
கண்களிலே வண்ணக் கனவுகள் ...
வந்தவனைப் பார்த்ததும்
கணவனாக வரித்து ...
குடும்பம் நடத்தி ...
பிள்ளைகள் ..பேரன் பேத்திகள் ...
கற்பனையில் ....
இரவெல்லாம் கண்விழித்து
அம்மா சுட்ட பலகாரங்களை
சப்புக்கொட்டி சாப்பிட்டு விட்டு ..
சொன்னதோ.."சொல்லி அனுப்புகிறோம்"...!
நான்காவது தடவை ......
வெட்கம் ஓடி விட்டது ...
வேதனை வந்து ஒட்டிக்கொண்டது .
கற்பனைக்கு மனம் கடிவாளமிட்டது ..
தேகத்தில் ஓர் இறுக்கம் ...
பார்வையில் காதல் இல்லை ..
சடங்குகள் ...
சாவி கொடுத்த பொம்மை போல ...
அம்மா மட்டும் மாறவில்லை...
இரவெல்லாம் கண்விழித்து ...
பலகாரம் ரெடி பண்ணி ....
பெண் பார்க்கும் படலத்துக்கென
வாங்கிய சேலை ..சாயம் போவதற்குள்
இவனாவது .....அல்லது ...
இவனும் சொல்வானோ ...
"சொல்லி அனுப்புறோம் " என்று ...!