காதல் வலி

காதலிப்பது தவறல்ல
பொய்யாக காதலிப்பதுதான் தவறு

இதயம் என்பது ஒன்றுதான்
இதில் ஆண் இதயம் வேறு
பெண் இதயம் வேறல்ல..

ஏமாற்றுவது ஒரு இதயம் என்றால்
வலிபெருவது ஒரு இதயம்
இந்த வலிக்கு மருந்து என்பது
இல்லாத ஒன்று

கனவுகளுக்கு இரையாகும்
இரவுகளுக்கு தூக்கத்தை
தருவது யார்?

இன்ப துன்பங்கள்
கலந்து வருவது இயல்புதான்
ஆனால் துன்பங்கள் மடடுமே
வருவது இதில்தான்

அழகான ஒரு உறவு
அமைதியான ஒரு பயணம் இதில்
எதற்கு ஏமாற்றம் என்ற ஆயுதத்தை
திணிக்க வேண்டும்...

ஆயுதம் கொண்டு அடித்தால் கூட
சில நாள்களில் மறைத்து விடும்
அன்பால் அடித்தால் அடிமனம்
உடைந்து ஆயுள் வரை
ரத்தம் சிந்தாமல் சாக வேண்டும்..

எழுதியவர் : வே.அழகேசன் (14-Nov-16, 5:03 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
Tanglish : kaadhal vali
பார்வை : 118

மேலே