நான் கண்ட அதிசயங்கள்
மொட்டுக்கள் கூட பூக்களாய் பூத்து சிரிக்கிறது வெட்கத்தில் ....
உன் கை விரல்கள் தொட்டதால்....
பட்டுபோன மரங்கள் கூட சுகமான காற்று தருகிறது.......
நீ அருகில் அமர்ந்ததால் மகிழ்ச்சியில் புரியாமல்.....
சூரிய ஒளி கூட குளிர்ச்சியாய் படுகிறது என் மீது......
உன்னை என் மனதில் சுமந்து கொண்டிருப்பதால்....
இரவில் நிலவு வெப்பத்தை தருகிறது....
உன் முகத்தை கானாத பொழுது....
அலைகள் கூட அமைதி காக்கிறது....
கடற்கரையில் நீ பேசும்பொழுது உன் குரலை கேட்பதற்காக.....
முட்கள் கூட பூக்களாய் மாறுகிறது...
உன் நினைவாய் நடந்து செல்லும் பொழுது....
வலிகள் கூட சுகமாய் இருக்கிறது.....
அன்பானவளே அதை நீ தரும்பொழுது ....
இத்தனை அதிசயங்கள் கண்டவன் ...
அன்புடன் கிருபா.....