புத்தனுக்கும் புரியவில்லையோ

ஆசையே
துன்பத்திற்கு
காரணமென்றார்
புத்தர்.!

ஆசைப்படாமல்
இருக்க முடியவில்லையே
மனிதனுக்கு,
எப்பாடுபட்டாகிலும்?

எத்தனை தேவதாசுகள்
எத்தனை பார்வதிகள்
இன்னும்கூட படிப்பினை
போதவில்லையோ,

மனிதன் மாறவில்லை,
மனத்திலும் மாற்றமில்லை,

காதலை ஒதுக்கவில்லையே,
கன்னியரை கண்டுகொள்ளாமலில்லையே,
போதைதான் பாதையாக்கி போகிறானே
புத்தன் சொன்னது பாடமெனில்

இங்கே ஏன் எல்லோருமே
உணராமலே தோற்றுப்போய்
கொண்டிருக்கிறோம்?

இது தான் விதியோ?
இல்லை
இயற்கை நியதியோ?

எழுதியவர் : செல்வமணி (21-Nov-16, 9:31 pm)
பார்வை : 407

மேலே