ஏற்றுக் கொள்வாயா என்னை

கற்பனை செய்தேன்
எனது பிருந்தாவனத்தின் ராசகுமாரி
நீ தான் என்று!!!
சிற்பனைக் கேட்டேன்
இவள் சிலையைக் எனக்கு
வடித்துத் தருவாயா என்று
வானில் பூக்கும் நட்சத்திர நாயகியே!!!
விலை மதிப்பில்லாதவளே!!!
என்ன விலை கொடுப்பேன்?
உனக்கு
என்னையே தருகின்றேன்
உற்றத் தோழனாக
உனக்கே உரியவனாக
கண்ணிமைக்காமல்
உன் உயிரைக் காக்கும் அஸ்திரமாக
மானம் காக்கும் வஸ்திரமாக
ஏற்றுக் கொள்வாயா என்னை??
தென்றாலாக வருகிறேன்
உன்னைக் கண்ட நொடி முதல்
மனமெனும் ஜன்னலைத் திறந்து
ஏற்றுக் கொள்வாயா என்னை??
கேட்டுக் கொள்வாயா உன்னிடமே??
என்னைச் சுற்றி சுற்றி
இளைத்திருக்கும் இவனை
ஏற்றுக் கொள்வாயா என்று
கடிகாரத்தின் உள்ளே
எண்களைச் சுற்றும்
வினாடி முள்ளைப் போல்
கேட்டுக் கொள்வாயா உன்னிடமே

எழுதியவர் : சரத் குமார் (21-Nov-16, 9:38 pm)
பார்வை : 158

மேலே