அவள் அறியாமல்
அவள் காதில் ஊசலாடி என்னுடன்
கதைபேசிக்கொண்டிருக்கும் காதணி
இமைகளில் எனக்கு இன்பத்தைக்கொடுக்க
வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் அந்த கரு மை
இதையெல்லாம் அவளை அறியாமலேயே
இரசித்துவிடலாம் என்று தான்
பார்வைகளை வீசிக்கொண்டிருந்தேன்.
அதை உணர்ந்த அவளாவது
நான் பார்ப்பது தெரியாதமாதிரி
நடித்திருந்திருக்கலாம். அவ்வப்போது
நான் பார்க்கின்றேனா என்று
சரிபார்த்து எனக்கென கிடைக்கும்
சிறிது நேர இன்பத்தையும் சிதறடித்துவிடுகிறாள்.