புகல்வாய் நெஞ்சே

தன்தேவை தனைச்சுருக்கித் தன்பிள்ளை நலம்பேணும்
****தந்தை வுள்ளம் !
துன்பங்க ளண்டாமல் முப்போதும் இமைபோலத்
****துணையாய்க் காக்கும் !
அன்பாக அரவணைத்துப் பல்கலைகள் பயிற்றுவித்தே
****ஆன்றோ னாக்கும் !
பொன்னாட்டில் தந்தையரின் பாசத்திற் கீடுண்டோ
****புகல்வாய் நெஞ்சே !

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
காய் காய் காய் காய்
மா தேமா

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-Nov-16, 12:06 am)
பார்வை : 54

மேலே