ஒன்றுபடுவோம்
ஒரு கை ஓசை ஓங்கி
ஒலிக்குமேயானால்
தூங்கும் இந்த உலகத்தை
எழுப்பிவிடலாம்
என்ன செய்ய?
கிருஷ்ணரும்,புத்தரும்,
மகாவீரரும்,ஜீஸஸூம்,
நபிகளும் இன்னும்
பலரும் முயற்சித்தனர்
முடியவில்லை
சமகாலத்தவராய்
இருந்து இருப்பின்
அனைவரும்
விழிப்பு நிலையை
அடைந்திருப்பர்.
பரவாயில்லை,
காலம் கடந்து விடவில்லை
குழுவாய் இருப்பதை
விடுப்போம்
கூட்டாய் ஒன்று பட்டு
குறைகளை கலைவோம்!
#sof #சேகர்

