பாதை மாறிய காதல்

தனம் என்ன ஆச்சு ஏன் அழுகற
சொல்லு தனம் நானும் அழுவேன் ...
சினுங்கினான் கார்த்தி
கீழ விழுந்துட்டேன் தோ இந்த கல்லு தான் தட்டி விட்டுச்சு உதட்டை பிதுக்கிக் கொண்டு வராத கண்ணீரை கண்ணை அழுத்தி துடைத்துக் கொண்டு பேசினாள் தனலட்சுமி பாப்பா, 4வது பி செக்சன் படிக்கிறாள்.....
இந்தக்கல்லை நான் என்ன பன்ன போறேன் பாருனு சொல்லீட்டே இன்னொரு கல்லை எடுத்து அந்தக்கல்லின் மீது போட்டுவிட்டு கிகி கல்லு செத்துப் போச்சு தனம் நீ அழுவாத கண்ணை துடைத்து விட்டுக்கொண்டே வலிக்குதா என்று கேட்டு தன் எச்சியை தொட்டு தனத்தின் காலில் தடவி விட்டு அங்கிருந்த மண்ணை எடுத்து காலில் தேய்து விட்டு சரியாயிடும் வா போலாம் என கை பற்றி இருவரும் விளையாட ஒடினர் கார்த்தி பேபியும் 4வது பி செக்சன்
இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் இருவரும் ஒருவரை பிரிந்து ஒருவர் இருந்ததில்லை, பள்ளி போவதில் இருந்து ஆரம்பித்து இரவு உறங்கும் வரை ஒன்றாக தான் இருப்பார்கள் கார்த்தியின் வீட்டில் ஒரு இரண்டு வருடத்திற்கு முன் குடிவந்தவர்கள் தான் தனம் வீட்டினர் இவர்களின் இந்த சிநேகத்தை பார்த்து அனைவரும் பொறாமை படுவர் , சிறு வயதில் இருந்த இந்த நட்பு பதினொன்றாவது போகும் போது நண்பர்களின் கிண்டல்களுக்கு இணங்க காதலாக மாறி விட்டது , இருவரும் உருகி உருகி காதலித்தனர் சிறுவயதில் இருந்தே அப்படி இருந்ததால் அவர்கள் பெற்றோருக்கு அது பெரியதாக படவில்லை , பன்னிரண்டாவதும் முடித்தாயிற்று இருவரும் நல்ல மதிப்பெண்ணில் வெளியேறினர் , தனம் உள்ளூரிலே ஒரு கலைக்கல்லூரியில் சேர்ந்தாள் , ஆனால் கார்த்தி வெளியூரில் பொறியியல் பட்டம் படிக்க செல்ல முயன்றான் , அந்த பிரிவு தான் அவர்களின் முதல் பிரிவு .....
இருவரும் கல்லூரி சென்ற சில நாட்களில் எப்பொழுதும் போனில் பேசிக் கொண்டிருப்பர்... நாட்கள் செல்ல செல்ல அந்த உரையாடல் குறைந்தது காரணம் இருவரின் படிப்புச்சுமை தான் , அப்படியே சில நாட்களில் இருவரும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே பேசி வந்தனர். அந்தச் சமயத்தில் தான் கார்த்தியின் வாழ்க்கையில் வந்தாள் கவிதா, ஆண்கள் பார்த்ததும் அழகோவியம் என சொல்ல துடிக்கும் பெண் தான் கவிதா ஆனால் அவள் எந்த ஆனையும் விரும்பியதில்லை, அப்படி இருந்தவளுக்கு கார்த்தியின் மேல் சற்றே சலனம் ஏற்பட்டது காரணம் கார்த்தி படிப்பில் நம்பர் ஒன் , படிப்பில் சந்தேகம் கேட்க துவங்கிய நட்பு வாட்ஸ்அப் மூலம் காதலாக மலர்ந்தது, " எப்டிடா மச்சி கரெக்ட் பன்ன , அதிர்ஷ்டசாலி டா நீ" இப்படி தன் நண்பர்கள் சொல்லும் போதெல்லாம் வானத்தில் பறப்பது போல இருந்தது, பெரும்பாலும் வகுப்புகளை கட் அடித்து விட்டு காயத்ரி உடன் அவுட்டிங் என வெளியே சுற்றியே வந்தான், ஆனால் தனமோ எப்பொழுதும் கார்த்தியின் நினைவாகவே இருந்தாள் , நோட்டுகளில் கார்த்தி தனம் என எழுதுவது, கோயில் சுவரில் பெயர் எழுதுவது என விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தாள்....
தனத்தின் தோழி ஒருத்தி கார்த்தியுடன் படிக்கிறாள் எதேச்சையாக அவளை சந்திக்கவே கார்த்தி-காயத்ரி காதல் மேட்டரை உளரி விட்டாள் ...
பயங்கர அழுகை ட்ரிங் ட்ரிங் தேம்பிக் கொண்டே கார்த்திக்குக்கு போன் செய்தாள் ,
சொல்லு தனம் எதிர்முனை கார்த்தி குரல் பழைய காதல் இல்லாமல் வெளியேறியது
காயத்ரி யாரு என்ன ஏமாத்துரியா கார்த்தி ???
சற்று அமைதிக்கு பின் என்ன மன்னச்சிரு தனம் உனக்கும் எனக்கும் செட் ஆகாது , நானும் காயுவும் உயிரா லவ் பன்றோம் , நம்ம சின்ன வயசு நட்ப நீ தப்பா புரிஞ்சுகிட்ட உன் மேல எனக்கு காதல் இல்லை பதில் ஏதும் இல்லாமல் இனைப்பை துண்டித்தான் கார்த்தி
அய்யோ தான் கேட்டதெல்லாம் கனவாக இருக்க கூடாதா , என் கார்த்திக்கு என்ன புடிக்கலையா , அவன் சொன்னதெல்லாம் உண்மையா உடைந்து போய் அழுதுவிட்டாள், எப்பொழுதும் அவன் நினைவாகவே இருந்தது , அவனை மறக்க முடியவில்லை,,,
நாட்கள் கடந்தன தனம் கல்லூரியை முடித்து ஒரு பிரபல தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றாள் , இன்னும் அவள் நினைவில் கார்த்தியே ..,
கார்த்தி கார்த்தி காயு பதற்றத்துடன் கூப்பிட்டாள், என்ன காயு என்ன ஆச்சு எங்கப்பா எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டார் எங்கப்பாவ மீறி என்னால எதுவும் பண்ண முடியாது மன்னிச்சிடு
காயு என்ன சொல்லற அப்போ என் நிலமை
கையெடுத்து கும்பிட்டு என்னை மன்னித்துவிடு என விடைபெற்றாள் காயத்ரி
நாட்கள் கடந்தன தாடியெல்லாம் வைத்து சோகமான உருவமாக மாறினான் கார்த்தி, ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான் தனம் வேலை பார்க்கும் அதே கம்பெனி தான் ஆனால் இருவருக்கும் தெரியாது அது...
எதேட்சையாக இருவரும் பார்த்துக்கொள்ளவே இருவருக்குள்ளும் ஒரு வித சந்தோசம் மின்னியது, கார்த்தி என்ன இது எப்டி இருக்க , ஏன் தாடி எல்லாம் என்னாச்சு என அனைத்து கேள்விகளையும் ஒரேயாக கேட்டாள்
நல்லாருக்கேன் நீ என ஒருவித குற்ற உணர்ச்சியுடன் பேசினான் ..
ம் காயத்ரி என இழுத்தாள் தனம் .
அவ பாதில வந்தவ தானே பாதியிலே போயிட்டா நான் தான் நிஐம் எது நிழல் எதுன்னு தெரியாம வாழ்ந்துட்டன் வெறுமையாக பேசினான்
கார்த்தி நான் இன்னும் உன்ன மறக்கல வார்த்தையை விழுங்கினாள் ....

சற்றும் யோசிக்காமல் தனம் ப்ளீஸ் என்ன மன்னிச்சு ஏத்துக்குவியா கையை பிடித்து குழந்தை போல அழுதான்
கார்த்தி என்ன இது எல்லோரும் பாக்கறாங்க அழுகாத
நீ என்னை ஏத்துக்குவேனு சொல்லுடீ ப்ளீஸ்
அட மடையா நான் உன்ன எப்பவும் மறக்கல , தப்பு பண்ணா உன்ன தண்டிக்க மட்டும் தான் செய்வேன் அதுக்காக விட்டுட்டா போயிடுவேன் தாய் அப்படி தன் பிள்ளைய செய்ய மாட்டாங்கள்ள அது போல தான் , என்னைக்கும் நீ என்னோட முதல் குழந்தை கார்த்தி சொல்லி விட்டு கார்த்தியின் நெற்றியில் முத்தம் கொடுத்து உண்மை காதலை உணரவைத்தாள்

எழுதியவர் : க.நாகராணி (22-Nov-16, 10:42 pm)
பார்வை : 818

மேலே