காரணங்கள்

அவள் குரல்வளை நடுக்கத்தில்
எங்கோ ஒரு நெருடல்
ஆரம்பித்து விட்டது எனக்குள்....

நலம் நலமென்ற அவள்
மெல்லிய குரலில் ஒளிந்து
கொண்டது அவளின் நலமின்மை....

மூடிய இமைகளுக்குள்
சின்னதாக முளைத்து கருவிழியோடு
கலந்து நின்றது அவள் கண்ணீர்...

காரணம் கேட்டும் ஒன்றுமில்லை
என்றவளின் உதடுகளுக்குள்
ஓராயிரம் காரணங்கள் ஓலமிட்டது...

என்னை வழியனுப்பியவளின் விழிகளுக்குள்
தெரிந்த வலிகள் சோக கீதங்களாக
என்னோடு ஒட்டி வந்து சேர்ந்தது
என் வீட்டின் முற்றம் வரை....

வீட்டினிலுள் நுழைந்த கையோடு
தட்டிவிட்டு ஒட்டி கொண்டேன்
என் வீட்டு சோக ஸ்பரிசங்களை...

எழுதியவர் : இந்திராணி (26-Nov-16, 3:50 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
Tanglish : kaaranangal
பார்வை : 148

மேலே