வியப்பு
பாரம்பரிய
உணவு முறைகளை
பன்னாட்டு
உணவு முறைகள்
விழுங்கிக்கொண்டிருக்கையில்.....!
புதிது புதிதாய் ....
வியாதிகள்
வருவதில் என்ன
பெரிய வியப்பு !!
பேரன் பேத்திகளுக்கு
தாத்தா பாட்டிகளை
விட்டு வைக்குமா
காலம் ?
என்ற நிலை மாறி
குழந்தைகளுக்கு
தாய், தந்தையையாவது
தக்க வைக்குமா
என்கிறது இன்றைய
உணவு முறை.....!!!
மரணம்
வயதானவர்களுக்கு மட்டும்
வாசல்வரை
வந்து போகும்
காலம் மாறி......
வயதில்
வித்தியாசமின்றி
வாசல் தொடுகிறது-மரணம்
நம் உணவு முறை
பர்கருக்கும், பீட்ஸாவுக்கும்
மாறியதால்....!!!