பொறுப்பின்றி

சுட்டெரிக்கும்
சூரியனின்
மாலைப் பொழுது

சந்தைக்கு
வந்து கூடியதுபோல்
ஊர் சனம்

குளிக்காதவரையும்
குளிப்பாட்டும்
ஆதவனின் அரவணைப்பு

அறியாதவரையும்
அல்லல் படுத்தும்
அவலம்

இயலாமையால்
செயலற்று
தவிக்கும் மக்கள்

நல்லது நடக்க
வேண்டிடும்
உறவுகள்

ஆழ்கடலில்
முத்தெடுத்த
பெரு மகிழ்ச்சி

எடுத்த முத்து
பொலிவிழந்து
சிதைந்ததுபோல்

ஆழ்துளையில்
விழுந்த சிறுமி
இறந்துவிட

பெற்றவள் துடித்த
வலியின் வேதனை
எவனும் உணரலையே!

எப்போதும்போல்
எல்லாமும் நடக்கின்றன
பொறுப்பின்றி.

எழுதியவர் : கோ. கணபதி. (27-Nov-16, 7:18 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 43

மேலே