சம்பளம் வரும்- ஆனா-
என்னய்யா என்னத்தே கண்ணையா ஸ்டைல வரும் ஆனா வராதுங்கற மாதிரி சொல்லற?
@@@@
இந்த மாச சம்பளத்தை அரசும் தனியார் நிறுவனங்களும் வழக்கப்படி நம்ம வங்கிக் கணக்கில ஏத்திடுவாங்க. 1 ஆம் தேதிக்கப்பறம் படிக்கர பிள்ளங்களோட கல்விக் கட்டணம், ₹வீட்டு வாடகை ---- -------------பால் காசு, பேப்பர் காசு, பேருந்துல அல்லது தொடர் வண்டில பயணிக்கறவங்க பயண பாஸ் வாங்க மளிகைப் பொருள்கள் காய்கறிச செலவு இதுக்கெல்லாம் 1000, 500, 100, 50, 20, 10, 5 எல்லாமே தேவை.
மத்திய அரசு ஊழியர்கள் 46 லட்சம்,
மத்திய அரசு ஓயுவூதியதார்கள் 55 லட்சம், தனியார் துறை ஊழியர்கள் எண்ணிக்கை 48 கோடி, ,தமிழக அரசு பணியாளர்கள் சுமார் 13 ,லட்சம் பேர், தமிழக அரசு ஓய்வூதியர்கள் சுமார் 7 லட்சம்.
இவ்வளவு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் ஓயவுதியர்கள் அனைவருக்கும் அவர்கள் சம்பளத்தை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அவர்கள் அனைவரும் 1,ஆம் தேதியன்று வங்கிகளின் வாசல்களிலும் ஏடிஏம் வாசல்களிலும் வரிசை கட்டுவார்கள்.
லட்சக்கணக்கானவர்களின் பிரச்சனைகளை வங்கிகள் எப்படி சமாளிக்கப் போகின்றன?
நாடு முழுவதும் இருப்பது 2 லட்சம் ஏடிஎம் மெஷின்கள் தான். அவற்றில் இப்போது 85 ஆயிரம் மெஷின்களைத் தரம் உயர்த்தி உள்ளார்களாம்.
மீதி இருப்பதெல்லாம் இன்னும் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படவில்லை.
கறுப்புப பணத்தை ஒழிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை யாரும் குறை சொல்லமுடியாது.
ஆனால் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் 50 நாட்களுக்காவது வங்கிகளின் வாசல்களிலும் ஏடிஎம் முன்பும் காத்திருந்து கடுந் தவம் புரிந்து மனித வேலை நேரத்தை வீணடிக்கும் நிலையைச் சாளிக்கக் கற்க்கொள்ள வேண்டும்.
சரியாகத் திட்டமிட்டிருந்தால் இந்த நெருக்கடியைச் சுலபமாக சமாளித்திருக்கலாம்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பார்ப்போம் அடுத்த வாரம் தெரியும்.
நன்ற: ஜூனியர் விகடன 30/11/16