கணவன் படும் பாடு

எதையாவது புரியிற மாதிரி பேசுறீங்களா?

'அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா... அப்படியே அப்பன்போல’னு நீங்க சொன்னா, லேப்டாப்பை மூடிவெச்சுட்டு நாங்க குழந்தையைப் பார்த்துக்கணும்னு அர்த்தம்.

'ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமா?’னு நீங்க கேட்டா,
குழந்தைய பாத்துக்கோங்கனு அர்த்தம்.

'தலை வலிக்குது’னு சொன்னா, ஈவ்னிங் வரப்பவே டிபன் வாங்கிட்டு வரணும்னு அர்த்தம்...

இதையெல்லாம் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ் ஒண்ணு போடணும்!

கல்யாணமான நாளுல இருந்து வீட்டுக்குள்ள முணுமுணுப்பும், தொணதொணப்பும்தான் இருக்கே தவிர, என்னைக்காவது ஒரு கிளுகிளுப்பு இருக்குதா?

வருஷத்துல 365 நாள் இருக்கு... அதுல ஒரு நாள் உங்க பொறந்தநாளு. அதை மறந்தா என்னமோ, அம்மாவைச் சந்திச்சுட்டு வந்த அதிருப்தி எம்.எல்.ஏ-வை கேப்டன் முறைக்கிறதுபோல பாக்கிறீங்க. சரி பொறந்த நாளுகூட ஓ.கே... சோஷியல் மேட்டர் பண்ணிக்கலாம்.

ஒவ்வொரு கணவனும், தன் சந்தோஷத்தின் 'நினைவு நாளா' நினைக்கிற கல்யாண நாளை, நினைவிலேயே வைக்கசொன்னா எப்படிம்மா?

வீட்டுக்கு வந்தவுடனே 'வாயை ஊது’னு சொல்றீங்க.
அதுவே விவரமா ஏதாவது பேசுனா 'வாயை மூடு’னு சொல்றீங்க.
இதைத்தான் 'எகனைக்கு மொகனை’னு சொல்வாங்க.

எங்க மேல ஏன் இவ்வளவு குரோதம்?

மனைவிகளே... மனைவிகளே, நீங்கள் எங்களை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்தாலும், நாங்கள் வீட்டு வாசலில் செருப்பாகக் கிடப்போம்.

துணைவிகளே, துணைவிகளே, நீங்கள் எங்களைக் கோபத்தில் கும்மியெடுத்தாலும், குழம்புச் சட்டியில் பருப்பாகக் கொதிப்போம்!

'கேம் விளையாடிட்டுத் தர்றேன்... செல்போனைக் குடு’னு கேட்கிறப்பவே, அதுல பாம் செட் பண்ணுவீங்கனு எங்களுக்குத் தெரியாதா?

பொம்பளைங்கன்னா கடுகு டப்பா, மொளகு டப்பால காசை ஒளிச்சுவைக்கிறதும்...

ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், கான்டாக்ட் லிஸ்ட்ல ரிஸ்க் நம்பரை அழிச்சுவைக்கிறதும் சகஜம்தானே!

ஃபேஸ்புக்ல எங்களோட நடமாட்டத்தை உளவுபார்க்க ஃப்ரெண்ட்ஸ் ஐடி, ஃபேக் ஐடினு வர்றீங்க.

ஆட்டோட தாடியைப் பார்த்தே, அது இளங்கறியா, கடுங்கறியானு கணிச்சுச் சொல்ற நாங்க,

எங்ககூட சாட்டிங் போடுறது லேடியா இல்ல கேடியானு கண்டுபிடிக்கவா மாட்டோம்!? ஆல் மனைவீஸ் நல்லா கேட்டுக்கங்க...

நைட்டிக்குத் துப்பட்டாவா துண்டு செட்டாகாது,
ஃபேஸ்புக்ல உங்க துப்பறியும் படம் ஹிட்டாகாது!

பக்கத்து வீட்டு பாட்டில இருந்து நீங்க போற பியூட்டி பார்லர் ஆன்ட்டி வரை எங்களை 'அண்ணா’னு கூப்பிடச் சொல்லிவெச்சிருக்கீங்களே... அதுதான் வன்கொடுமைகளுக்கு மத்தியில் பெண்கொடுமை!

ஒரு புருஷனோட பிரச்னைகளைப் புரிஞ்சுக்கணும்னா,

ஒரு மாசம்...
வேணாம் ஒரு வாரம் நீங்க புருஷனா இருந்து பாருங்க...

(ஓ சயின்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அதுக்கு அனுமதிக்காதா?)

அப்பதான் புருஷங்க அருமை தெரியும்...

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Nov-16, 8:30 am)
பார்வை : 410

மேலே