என் வாழ்வு உனக்காக

நொடி நேரம் அவளை கண்டு
நிமிடகணக்கில் அவளழகில் உறைந்து நின்று
மணிக்கணக்காய் மறைவில் மறைந்து நின்று
நாள்கணக்கில் நான் அவளை தொடர்ந்து
வாரகணக்கில் அவள் வதனத்தை இரசித்து
மாதக்கணக்கில் அவளிடம் பேச மனனம்செய்து
ஆண்டுபல கழித்து அவளிடம் சொன்னேன்
என்னுடைய இந்தவாழ்க்கை என்னவளே உனக்காகயென...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (30-Nov-16, 11:51 am)
Tanglish : en vaazvu unakaaga
பார்வை : 265

மேலே