காதலாக
சகியே
சமைத்துப்பார் பார்த்து
சமைத்து பார்க்கிறாய்
தண்ணீருக்கும் வெந்நீருக்கும்
பெயர் இடுகிறாய்
புதிது புதிதாய்
சாதிக்க பிறந்தவனுக்கு
சோதனைகள் சகஜமென
மனதை தேற்றி
உன்ன துவங்கினேன்
எப்படி இருக்கு என்றாய்
விழுங்கவும் முடியவில்லை
இறக்கிடவும் வழியில்லை
உணவையும்
பதிலையும்
சமாளித்து ம்ம்ம்ம்ம்
என்றேன் காதலாக காதலுக்காக