அவளுக்கு நிகர் அவளே

அன்பு மட்டுமே
சுரக்கும்
அட்சயபாத்திரம் !

பலன் எதிர்பாராது
கருணைக் கனியுதிர்க்கும்
கற்பகத் தரு !

இழந்துவிட்டால்
பெற முடியா
ஈடில்லா செல்வமவள் !

நாத்திகனும்
வணங்கும்
நடமாடும் தெய்வமவள் !

உதறிச்செல்லும்
உறவுகளிடம் கூட
வேற்றுமைகள் விலக்கி
அன்பை மட்டுமே
அருளும் அன்னமவள் !

எஞ்சியதை
மட்டுமே உண்டு
குடல் சிறுத்தவள் !

அவள்தான் அன்னை !
அவளுக்கு இணை
எவ்வுலகிலும் இல்லை !

அவளைத் துதித்தால்
வாழ்வே வரமாகும் !
அவளை மறந்தால்
எடுக்கும் பிறப்பெல்லாம்
தீரா சாபமாகும் ....!

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (5-Dec-16, 3:31 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 613

மேலே