பொம்மை ஆடும் ஊஞ்சல்
பொம்மை. ஆடும். ஊஞ்சல்.
ஆசை மிகுந்த. பொம்மை ஒன்று
தானே தன்னை இயக்குவதாக
மயங்கி வெகுகாலமாக ஊஞ்சலில்
ஆடிக் கொண்டிருக்கிறது.
ஆடி ஆடிக் களைத்து தளர்ந்த
பொம்மை தன்னை
ஆட்டுவிப்பவனை நேற்றுதான்
அறிந்து தேடியது
ஊஞ்சலில் அமர்த்தி, கயிற்றின்
முனையை பிடித்திருந்தவனை
கண்டு கொண்டது பொம்மை.
ஏன் என்னை தேடுகிறாய்?
அசரீரியாக பேசினான்
ஆட்டுவித்தவன்.
ஊஞ்சலில் அமர்த்திய. நீதானே
இறக்கிவிட வேண்டும்
நியாயம். கேட்டது. பொம்மை.
ஊஞ்சலில் அமர்த்தினேன்.
பலகையை பெரிதாக்கி
கயிற்றின் முனையை விட்டுச்
சென்றது நீதானே பதில்
உரைத்தான் ஆட்டுவித்தவன்.
இறங்கத் தெரியவில்லை
புலம்பியது. பொம்மை.
உறவுச் சங்கிலியை அறுத்தெறி.
பற்றுப் பலகையை விட்டு இறங்கி
என்னுடன் வந்துவிடு. உபாயம்
கூறினான் ஆட்டுவித்தவன்.
அழைத்தவன் உடன் செல்ல
முடியாமல்,
ஆட்டத்தை தொடரவும்
இயலாமல்,
ஊஞசலை விட்டு இறங்கவும்
மனசில்லாமல்
ஆடிக்கொண்டிருக்கிறது. பொம்மை.
-மீனாகோபி.